புதன், 2 நவம்பர், 2016

நாட்டில் இருக்குது ஆயிரம் பிரச்சினைகள் !! தேவையா இப்போது கவுதமி-கமல் பிரிவு விவகாரம் ?



நாட்டில் இருக்குது ஆயிரம் பிரச்சினைகள் !!தேவையா இப்போது நடிகை கவுதமி-கமல் பிரிவு பிரச்சினை ?



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

உலகம் முழுவதும் உள்ள அன்புத்தமிழ் 
நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்.
வந்தாரை எல்லாம் வாழவைக்கும் தமிழகத்தில் 
இன்றையதினம் எண்ணிலங்காதபிரச்சினைகள் 
இங்கு வாழ்ந்து வரும் அனைத்து தமிழர்களையும்வாட்டிவதைத்துக்கொண்டிருக்கின்றது.
காவேரி நீர் பிரச்சினை, பாலாற்றின் குறுக்கே 
ஆந்திர அரசு தடுப்பணைகட்டி தமிழர்களின் 
வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியதை
கண்டு கொள்ளாத கோமா நிலையில் உள்ள 
மாநில அரசாங்கம், முல்லைப்பெரியார் அணைக்கு பதிலாக, புதிய அணைகட்ட முயற்ச்சிப்பதைதடுத்து நிறுத்த வக்கு,வகை,தெம்பு,திராணி அற்ற மாநிலஅரசின் செயலற்ற தன்மை, சிறுவாணி நதியின் குறுக்கே கேரள அரசாங்கம் புதிய அணைகட்ட முயற்சி, அதை தட்டிக்கேட்க தெம்பு இல்லா தமிழக அரசின் நிலைப்பாடு, உயர்ந்து வரும் விலை 
வாசி, மாநிலத்தில் அன்றாடம் நாள், நேரம் தவறாமல் நடந்துவரும்கொலை,கொள்ளை, கற்பழிப்பு,செயின் பறிப்பு,வீட்டில் தனியே இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு 
இல்லாத நிலைமை, வயதில் மூத்தவர்களை குறிவைத்து அரங்கேறும் கொலைகள், சட்டம் ஒழுங்கு சாந்தி சிரித்தும், அதனைப்பற்றி எல்லாம் சிறிதும் கவலைகொள்ளாத காவல் துறை, அதனை நிர்வகிக்கும்பொறுப்பில் உள்ள நிதி அமைச்சர், எங்கும் ஊழல்,எதிலும் ஊழல் என்றே இயங்கிவரும் அரசாங்கத்தின் 
அனைத்து துறைகளும், நீதியை விலைக்கு வாங்கி அதனால் மீண்டும் ஆளும் பொறுப்பை ஏற்ற ஆட்சித் தலைமை, அது தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உண்மையில் என்ன நிலையில் அவர் இருக்கிறார் என்பதை வாக்களித்த மக்களுக்கு 
விளக்கிக்கூற முன்வராத அரசாங்கத்தின் செய்தி ஒலிபரப்புத்துறையின் செயலற்ற தன்மை, கிடப்பது கிடக்கட்டும், கிழவியை தூக்கி மணவறையில் வைத்து தாலிகட்டு, என்பது போல, இங்கே நிர்வாகம் செயலற்ற நிலை கிடக்கட்டும், நடைபெற இருக்கிற மூன்று சட்டசபைத்தொகுதிக்கான இடைத்தேர்தலில் 
ஆளும்பொறுப்பில் உள்ள கட்சி வென்றாக வேண்டும் என்ற முனைப்புடன் அனைத்து 
அமைச்சர்பெருமக்களும்,மக்கள்பணிசெய்வதை 
விடுத்து, தொகுதிகளில் முகாமிட்டுள்ள பொறுப்பற்ற செயல்பாடு, இதுபோல இங்கே ஆயிரமாயிரம்பிரச்சினைகள் நடைபெற்றுக் கொண்டு  உள்ளது அதனைப்பற்றி சிறிதும் 
கவலைப்படாத, அரசாங்கத்தின் அடிவருடிகளாக இங்கே செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஊடக மற்றும் பத்திரிகை துறையைச்சேர்ந்தஅன்பர்கள் 

                  " கவுதமி-கமல் பிரிந்தனர் "

என்ற விஷயத்தை மிகவும் முக்கியமான விஷயமாக எடுத்துக்கொண்டு அதைப்பற்றிய விளக்கங்களையும் சம்பந்தப்பட்டவர்களின் தொலைபேசி,நேரடி பேட்டிகளை
ஒளிபரப்புவதும், பத்திரிகையில் செய்திகளை வெளியிடுவதும் எந்த அளவில் சரியானதொரு செயலாகும் என்று எனக்கு தெரியவில்லை.  

பகுத்தறிவுப் பகலவன் என்றுஅழைக்கபட்ட திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார் சொன்ன கருத்து இங்கே என் நினைவுக்கு வருகின்றது. அது என்னவென்றால் :-

" எனக்கு மட்டும் சக்தி இருந்தால், முதலில் நான் இந்த சினிமாவை தீயிட்டுக் கொளுத்துவேன். இந்த சினிமா எதிர்காலத்தில் இந்நாட்டில் வளர்ந்து வரும், இளைய தலைமுறையினரின் நெஞ்சினில், நஞ்சினைக்கலந்துஅவர்களை தீய பாதையில் இட்டுச்செல்வதில் முதலிடம் 
வகிக்கும் என்ற காரணத்தால் "

என்று பெரியார் சொல்லிச்சென்றார். 

அந்தக்கருத்து இன்றளவும் உண்மை என்பது நாட்டில் இளைய சமுதாயம் நடந்துகொள்ளும் விதத்தில்செயல்படுவது அனைவரின் கண்கூடு.

இந்த சினிமாவினால், குறிப்பாக நமது தமிழகம் எந்த அளவுக்கு சீரழிவினை சந்தித்தது என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

நடிகரும், நடிகையும் இங்கே ஏறத்தாள 29 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்து அந்த செயல் திறமையால், தமிழ்நாடு 69 ஆண்டுகள் 
பின்னோக்கி நகர்ந்தது மட்டுமே நாம் கண்ட பலன்.

ஆக, இப்படிப்பட்ட சூழலில், ஒரு நடிகன் நடிகை முறையாக திருமணம்/மறுமணம்  செய்து கொள்ளாமல், கிட்டத்தட்ட பதிமூன்று 
ஆண்டுகள் ஒரே இடத்தில் வாழ்ந்து இப்போது பிரிந்து விட்டார்களாம். இது ஒரு செய்தியா ? 

முன்னொரு காலத்தில் கிராமங்களில் ஒரு சொற்றொடர் பயன்படுத்துவது நான் கேள்விப்பட்டுள்ளேன். அது என்னவென்றால் :-

மானங்கெட்ட செருக்கி மஞ்ச தேச்சு குளிச்சாளாம் !!-அத 
ஈனங்கெட்ட பய  எட்டி எட்டி பாத்தானாம் !!

அதுபோல கமல்ஹாசன் அவர்கள் சிறந்த நடிகர்தான் நான் இல்லை என்று சொல்ல வில்லை. ஆனால் அதற்காக அவர் சமூகநீதிக்குப் புறம்பாக செயல்படுவதை 
எப்படி அனுமதிக்க முடியும் ?
சினிமா நடிகனும் நடிகையும் ஒரு சேர சம்மதித்தாலும் திருமணம் செய்துகொள்ள ஒரு தடைச்சட்டம் கொண்டுவந்தாலும் அதில் தவறேதும் இல்லை என்றுதான் நான் சொல்லுவேன். கல்யாணம் செய்ய வேண்டியது பிறகு ஆறு மாதமோ அல்லது ஒரு வருடமோ விவாகரத்து செய்து கொண்டு இன்னொருவன்/ இன்னொருத்தியோடு சரசமாடி மகிழ்வது என்று திருமண வாழ்வின் உயர்ந்த லட்சியத்தையே கேலிக்கூத்தாக்கும் இந்த கூத்தாடிகளுக்கு வக்காலத்து வாங்குவதை நமது ஊடக, பத்திரிகை நண்பர்கள் முதலில் நிறுத்திக் கொண்டாலே அது போதுமானது.

இதுதான் இப்போது ஸ்ரீமான் பொதுஜனம் கேட்கும் கேள்வி மற்றும் ஆழ்ந்த மனக்கருத்து.

இத்துடனாவது ஊடக,பத்திரிகை நண்பர்கள் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதை தவிர்ப்பதோடு,இனிமேல் இதுபோன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் 
என்று அனைவரையும்பணிவன்போடு கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

வியாழன், 21 ஏப்ரல், 2016

" சூழ்ச்சியே " உனது மற்றொரு பெயர்தான் ஜெ !!






" சூழ்ச்சியே " உனது மற்றொரு பெயர்தான்  ஜெ !!




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம்.

இந்தியநாடு சுதந்திரம் பெற்றது முதல் இன்று 
வரை, தமிழ்நாடு எத்தனை எத்தனையோ 
அரசியல்வாதிகளை சந்தித்திருக்கிறது. ஆனால் 
அவர்கள் அத்துணை பேர்களிலும் இப்போது 
ஆட்சி,அதிகாரத்தில் இருக்கும் அம்மையார் 
ஜெ போன்று சூழ்ச்சியை மட்டுமே தன்னுடைய 
நெஞ்சில் சுமந்துகொண்டு இருக்கும் கேடுகெட்ட 
ஒரு அரசியல்வாதியை பார்த்தது இல்லை என 
எந்தக்கோவிலிலும் சத்தியம் செய்யலாம் என்று 
தமிழக வாக்காளப் பெருமக்கள் பலர் பேசிக் 
கொள்வதை என்னால் கேட்க முடிகிறது.

அரசியல் நடத்துவதற்கு சூழ்ச்சி என்பது ஒரு 
துணை நிலைப்பாடுதான் இல்லை என்று சொல்ல வில்லை ஆனால் அரசியல்முழுவதுமே இங்கே சூழ்ச்சியை ஆடையாக, அணிகலனாக வைத்து இயங்கிக் கொண்டிருக்கும் அம்மையார் போல எங்குமே காண முடியாது என்றே அரசியல் ஆர்வலர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

2011 ம் ஆண்டில் தாம் பெற்ற வெற்றி, இங்கே 
தொடர்ந்து தமக்கு மட்டுமே கிடைத்திட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில், ஆங்கிலேயர்கள் நமது நாட்டில் கடைப்பிடித்த "பிரித்தாளும் சூழ்ச்சி " யை தனது பிரதானமான ஆயுதமாக இந்தத் தேர்தலில் அவர் கையில் எடுத்துக்கொண்டதன் விளைவு,தமக்கு எதிராக விழுகின்ற அனைத்து வாக்கு வங்கிகளையும் தகர்த்து சிதறடித்திட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அவர் அரசியல் கோமாளி,
குடுகுடுப்பைக்காரன் கோபாலுவை (வைகோ) தனது கைக்கூலி என்று பயன்படுத்தி, இடது,வலது,கமிஷன் கட்சிகள் (கம்யூனிஸ்ட்),
நடிகர் விஜயகாந்த் கட்சி, இவைகள் திராவிட முன்னேற்றக் கழகத்தின்பக்கம்போய்ச்சேர்ந்துவி-டக் கூடாது என்பதில் மிக எச்சரிக்கையாக இருந்து அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார். அதுபோலவே திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் பிரித்தார். அதுபோலவே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி திமுகவோடுதான் கூட்டு சேரும் என்பதை எதிர்பார்த்து, அந்தக் கட்சியையும் தனது 
பணபலத்தால் உடைத்து எறிந்தார் வாசனை மீண்டும் கட்சி ஆரம்பிக்க வைத்ததன் மூலமாக. 

இந்த அத்தனை நிகழ்வுகளிலும் அவர் ஒன்றை கவனிக்க மறந்தே போனார். அதுதான் திமுகவை இந்தத் தேர்தலில் வெற்றி வாகை சூட வைக்கப் போகிறது. அது என்ன  என்றால்,  எந்த வாக்கு வங்கி திமுக வோடு இணைந்து விடக்கூடாது என்று எண்ணி அதனைத் தனிமைப்படுத்தி தனி அணியாக நிற்க வைக்கின்றாரோ  அந்த 
வாக்கு வங்கி அனைத்துமே தன்னுடைய கணக்கில் இருந்து கழட்டிவிடப்படுகிறது என்பதை அவர் கணக்கில் எடுத்துக்கொள்ள தவறுகிறார். அதே நேரம் திமுகவின் வாக்கு வங்கி, இவரிடம் இருந்து சென்ற புதிய தமிழகம்,
மனித நேய மக்கள் கட்சி, தேமுதிகவில் இருந்து 
பிரிந்து உதயமானமக்கள்தேமுதிககட்சியினரின் 
வாக்குகள், மற்றும் ஜெயின் கடந்த 5ஆண்டுகால 
அலங்கோல ஆட்சியினால் வெறுப்பு அடைந்த, எந்தக் கட்சியையும் சேராத பொதுமக்கள் வாக்கு, இவரது ஆட்சியின்மீது வெறுப்புற்ற அரசுஊழியர், ஆசிரியர்,மக்கள் நலப்பணியாளர் என்றுபட்டியல் நீண்டுகொண்டே போகின்ற அனைத்து மக்களின் வாக்குகளும் திமுக விற்கு மட்டுமே விழப் போகின்றது என்பதையும் ஆணவ  ஜெ கண்டு கொள்ள தவறியதன் விளைவு அடுத்த மாதம் 
இங்கே திமுகவின் ஆட்சி என்கின்ற மலர் மலர்வதற்கு வழி ஏற்படப்போகின்றது என்பதை வாசகர்களுக்கு நினைவுபடுத்திடவிரும்புகிறேன்

பொதுவாக, ஒரு தேர்தல் என்றால், எந்த ஒரு பாரம்பரியம் மிக்க அரசியல் கட்சியும் முதலில் தங்களது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடும். பிறகு வேட்பாளர் பட்டியல், அதன்பின்பு தேர்தல் பரப்புரை என்று மட்டுமே துவக்குவது வழக்கம். 

ஆனால்இந்தநடைமுறைக்கு மாற்றாக அம்மையார் தேர்தலில் ஈடுபடுவதற்கு என்ன 
காரணம் என்றால், அனைவரும் தேர்தல் அறிக்கையை வெளிவிட்ட பிறகு, தேர்தலுக்கு சில தினங்கள் இருக்கும் வேளையில், எவருமே எதிர்பார்த்திடாத வகையில் ஒரு மிகப்பெரும் இலவச பொருள் அறிவிப்பினை வெளியிட்டு 
வாக்குகள் அனைத்தையும் அள்ளிவிடலாம் என்று ஒரு தப்பு கணக்கு போட்டு உள்ளார் அவர். அதுவும் இந்தத் தேர்தலில் செல்லாக் காசாக போகப்போவதை அவர் இன்னும் அறியாமல் பிதற்றிக்கொண்டு திரிகின்றார்.

இதுவரை இவரது உச்சி வெயில் தேர்தல் பரப்புரை மூலம் ஐந்து மனித உயிர்களை பலி வாங்கியுள்ள இந்த இரத்தக் காட்டேரி இன்னும் எத்தனை பேர்களை சாவு மேடைக்கு அனுப்பக் காத்திருக்கிறதோ ? அது இறைவன் ஒருவனே அறிவான்.

எது எப்படி இருந்தாலும் உதயசூரியன் இந்த மண்ணில் உதிப்பதையும் ஆட்சி அமைத்திட உள்ளதையும் இந்தத் தாடகையால் தடுத்து நிறுத்திடவே முடியாது என்பது ஒன்றே என்போன்ற அரசியல் ஆர்வலர்கள் தருகின்ற 
முடிவான விளக்கம்.

இதற்கு விடை தருகின்ற நாள் மே மாதம் 19ம் தேதி பிற்பகல் 12மணிக்குமேல்என்பதேஉண்மை.

நன்றி !!  வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.


திங்கள், 28 மார்ச், 2016

ஸ்ரீமான் பொதுஜனம்........பகுதி எண். 2.






                 ஸ்ரீமான் பொதுஜனம் !!



எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

காலை வணக்கம் உங்கள் அனைவருக்கும்.

இன்றையதினம் நமது கட்டுரையின் தலைப்பில் 
இடம் பெற்றிருப்பவர்தான் 

           " ஸ்ரீமான் பொதுஜனம் ".
இவர் யார் என்று கேட்டால், எந்த ஒரு நாடாக 
இருந்தாலும் ஜனநாயக நடைமுறை அங்கே 
அமல்செய்யப்பட்டுஇருந்தால்,ஒவ்வொருமுறை 
தேர்தல் வருகின்ற காலங்களில் , அரசியல்வாதிகளின் கண்களில் அப்போது மட்டுமே தெரிகின்ற ஒரு மனித ஜந்து என்பவர் இவர் ஒருவரே.  

எந்தக்கட்சி ஆட்சி செய்திடினும் அதற்கு வாக்களித்துவிட்டு இவராலாவது நமது வாழ்க்கை முன்னேற்றத்தை நோக்கி சென்று விடாதா என்று கனவுகான்பதும் இவர் ஒருவரே.  

கிட்டத்தட்ட கடந்த அத்தனை தேர்தல் காலங்களிலும் இது போல கனவு கண்டு அது கலைந்து போனதால்கவலைப்படாதவரும் இவர் ஒருவரே.  

இவர் செய்த ஒரே அதிர்ஷ்டம் என்னவென்றால், கடந்த மூன்றுமுறை நடந்த தேர்தலிலும் இவரது பணியை மெச்சி, அரசியல் கட்சிகள் சில,வாக்கு ஒன்றுக்கு ஐநூறு முதல்,ஆயிரம் இரண்டாயிரம் வரை இவருக்குத் தந்து அதனால் பெரும் மகிழ்ச்சி பெற்றவரும் இவர் ஒருவரே.

வாக்குக்கு பணம் வாங்குகின்றபோது அது தவறு 
என்று தெரிந்திருந்தும் இன்றைய செலவுக்கு 
பணம் வேறு யார் தருகிறார்கள் என்று எண்ணி 
ஐந்து ஆண்டுகளில்,மீதமுள்ளநான்குஆண்டுகள் 
364 நாட்கள் தனது தலையிலும் தன் வாழ்விலும் மண்ணைஅள்ளிப்போட்டுக்கொண்டபெருமை மற்றும்  புகழும் இவர் ஒருவரையே மட்டும் சேரும். 

பணத்துக்காக கண்ட கண்ட கழிசடை 
அரசியல் வாதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களது கையில் ஆட்சியை ஒப்படைப்பதில் இவரிடம் உள்ள வல்லமை வேறு எவருக்கும் வரவே வராது.

தான் அளிக்கப்போகும் வாக்கை பெறுகின்ற நபர் 
தகுதி படைத்தவரா, ஆளும் திறமை உள்ளவரா,
தானும் பலன் அடைந்து மக்களுக்கும் ஏதாவது 
பொதுப்பணி செய்பவரா என்றெல்லாம் ஆராயந்திடாமல் வாக்குகளைத் தருவதில் இவருக்கு நிகர் இவரே. 

தனதுவாக்குகளை,முழுநேரஅரசியல்வாதிகளுக்கு தந்திடாமல், அரிதாரம் பூசி வருகின்ற நடிகர் மற்றும் நடிகைகளுக்கு மட்டுமே தந்து தந்து, தங்களது முகங்களில் கரியைப் பூசிக்கொண்ட பெருமை உண்மையில் உலகினில் வேறு எந்த நாட்டவருக்கும் வரவே வராது.

சரி. சொன்னதெல்லாம் போதும். இப்போது நடப்பு விசயத்திற்கு வருவோம். 2016 மே மாதம் இங்கே இந்நாட்டில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத்தேர்தலில் இவர் என்ன செய்திடக் காத்திருக்கிறார் என்பதனை அறிந்திட, நான் மதுரை மாநகர் சென்று அங்கே உள்ள சுப்பிரமணியபுரம் என்ற பகுதியில் 
வாழ்ந்து வருகின்ற ஸ்ரீமான் பொதுஜனங்களுள் 
ஒருவரான திரு. சடையன் வயது 60 என்பவரை 
நேர்காணல் செய்தேன் சென்ற வாரம். அதன் முழு பதிவினை நான் நேயர்களுக்கு நேரலையாக (LIVE)வழங்கிட இருக்கிறேன். (சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு )...

தயவு செய்து காத்திருங்கள்.......

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை T.R.பாலு.

************************************************************************************************************


கட்டுரை தொடர்கிறது.............

நாள் 20-03-2016.       நேரம் காலை மணி 10.00
இடம் :- மதுரை. சுப்பிரமணியபுரம் தினசரி சந்தை.

நான் நேர்காணல் நடத்திய திரு சடையன் அவர்களைப் பற்றிய சில குறிப்புக்கள்.
ஆதி திராவிட பழங்குடி வகுப்பினைச் சேர்ந்தவர். கல்வி அறிவு என்பது கடுகு அளவுகூட இல்லாத ஆனால் அதே நேரம் பொதுவாக சிந்தித்திடும் ஆற்றல் கொண்டவர். மதுரை அடுத்து உள்ள நத்தம் பகுதியில் உள்ள எங்களது பூர்வீக 5 ஏக்கர்  விவசாயநிலத்தை உழுகின்ற பணியினை மேற்கொள்பவர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக. தனது விவசாய விளைபொருள்களை விற்பனை செய்திடும் உரிமை அவருக்கு உண்டு நெல் தவிர. ஐந்து ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியில் விளைவித்த காய்கறி வகைகளை விற்பனை செய்திட வாரம் ஒருமுறை மதுரை சுப்பிரமணியபுரம் சந்தைக்கு வருவது அவரது வழக்கம். அப்போதுதான் அவரை சந்திக்கிறேன்.

நான் :- என்னப்பா !! சடையா எப்போ வந்தே. வூட்டுலே நலமா ?சடையன் :-  ஆமா சாமி. நல்லாத்தான் இருக்கேன் சாமி . அதான் நம்ம நிலத்துல விளைஞ்ச சித்த காய்கறிகளை வித்துட்டு போலாம்னு வந்தேன் சாமி. கைச்செலவுக்கு காசு இல்ல. வித்தா சில்றைகிடைக்குமுல்ல. பொறவு நெல் பயிர் அனேகமா அடுத்த வாரம் அறுவடைக்கு வரும் சாமி. மறக்காம அறுவடைக்கு வந்துருங்க சாமியோ.நான் :- ஆமா உங்க பகுதிலே எப்படி இருக்கு தேர்தல் நிலவரம் ? நீ யாருக்கு ஓட்டுப் போடறதா இருக்கே சடையா ?சடையன் :-  அட..என்ன சாமி..என் கிட்டே போய் இப்படி கேக்கீகளே !! நான் என்னத்தை உங்களுக்கு பதில் சொல்ல.நான் :- சும்மா உள்ளதை சொல்லுப்பா.சடை :- சாமி என்ன கோச்சுக்காதீங்க. நான் படியாத முட்டாப்பய தான். ஏற்கனவே அஞ்சு வருஷம் அந்த பொம்பள தந்த இலவச பொருளு,ஆடு,மாடு இத்த நம்பி ஓட்டுப் போட்டு அல்லாமே வீணாப்போச்சு சாமி. இப்ப புசு புசா ஆராரோ வாராக. அவக கிட்டே நாட்டை கொடுத்தா, இன்னும் கெடுத்து சீரழிச்சு புடுவாக சாமி. எங்களுக்கும் ஆண்டவன் கொஞ்சம் ஒசிக்கிற அறிவு தந்திரிக்கான். அதாலே நான் மட்டும் இல்ல சாமி எங்க பகுதி பூராவுமே ஒரு முடிவுலேதான் சாமி இருக்கோம்.நான் :- அது என்ன முடிவு சடையா ?சடை:-  எங்க தாத்தா ஒன்னு சொல்வாரு. புது கெட்டிக்காரனுக்கு பழைய புத்திசாலியே தேவலாம் அப்டீன்னு. அதால தலைவர் கலைஞர் அவுகளுக்கு மட்டுமே ஒட்டு போடுறதுன்னு முடிவு எடுத்து இருக்கோம் சாமி. இனிமே வேற யாரையும் நம்பி பள்ளத்துலே மீண்டும் விழ நாங்க யாருமே தயாரில்ல சாமி. எம்புட்டு காசு ஓட்டுக்கு யார் தந்தாலும் கலைஞர் யாரை அடையாளம் காட்டுதாரோ அவுகளுக்குதான் எங்க ஒட்டு சாமி. அவரு வந்தா மட்டுமே இனிமே இந்த நாட்டை சரிசெய்திட முடியும் சாமி. சாமி நான் வந்த வேலை முடிஞ்சுது. கிளம்புறேன் சாமி.அப்புறம்அடுத்தவாரம்..அறுவடை..மறந்துராதீக சாமி. வாறன் சாமி.

என்ன நேயர்களே !! நாட்டு நிலவரத்தை பார்த்தீர்களா ? இதுதான் உண்மை நிலவரம். யார் என்ன சொன்னாலும் என்ன பேசினாலும் இதுதான் நடைபெற உள்ளது. மீண்டும் ஒரு 1971தேர்தல் முடிவினைத்தான் இந்த தமிழ்நாடு சந்திக்க உள்ளது. மிகப் பெரும்பான்மை இடத்தைப் பெற்று தி.மு.க. மட்டுமே வெற்றி பெற இருக்கிறது. யார் குறுக்கே வந்தாலும் அவர்களது எண்ணம் ஈடேறப்போவது என்பது கிடையவே கிடையாது.                                     

ஆயிரம் கைககள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை !!  ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை.!!

வாக்களிப்பீர் உதயசூரியன்.

நன்றி !!  வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

புதன், 24 பிப்ரவரி, 2016

ஆரம்பம் ஆகி விட்டதடி !! அரூபத்தின் லீலைகள் !!





எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் மனம்கனிந்த காலை வணக்கங்கள்.
தலைப்பிலே குறிப்பிட்டுருப்பது தலைவர் கலைஞர் அவர்கள் சிவாஜிகணேசனின்நடிப்பில் வெளிவந்த " மனோகரா " என்ற திரைக்காவியத்தில் தலைவர் எழுதிய ஆரம்பக்காட்சியில் இடம்பெற்ற ஒரு அற்புதமான வசனங்களுள் ஒன்று. அதில் அந்த வசனம் எப்படி இடம் பெற்றிருக்கும் என்று சொன்னால் :-

ஆரம்பம் ஆகிவிட்டதடி அரூபத்தின் லீலைகள் !!தொடங்கி விட்டதடி உன் மாஜிக்கணவனின் பழிவாங்கும் படலம் !!                                                     நடமாடும் பாம்பே !! நாசத்தின் நர்த்தனமே !!நயவஞ்சகப் பிசாசே !!சிரிக்கும் சிலந்தியே !!

எனத்துவங்கும். நான் ஏன்,எதற்காக, அந்த வசனத்தை இன்றைய கட்டுரையில் தலைப்பாகத் தந்துள்ளேன் என்று சொன்னால், நேற்றையதினம் அன்பு நண்பர் திரு.திருமாவளவன் அவர்கள் தனது திருவாய் மலர்ந்து, இந்த மக்கள்நலக்கூட்டுஇயக்கம் என்று தொடங்கி, பின் அது மக்கள் நலக் கூட்டணி என்று ஆரம்பம் ஆனதற்கு, முதன்முதல்பிள்ளையார்சுழி போட்டதே நான்தான். என்னால்தான் இந்த இயக்கம் ஆரம்பம் செய்யப்பட்டது இந்தப்புகழ்,பெருமை என்பதில், வேறு எவருக்கும் பங்கு இல்லை என்று உரத்த குரலில், கழுத்து நரம்புகள் புடைக்க அவர் பேசியதொனி கண்டு நான் மிகவும்விசனமடைந்தேன் அன்புத்தமிழ் நெஞ்சங்களே.

இதைக் கேட்டால் நம்ம சாத்தூர் சொக்கன் துரோகி வைகோ சும்மா இருப்பாரா ? அவர் பங்குக்கு அவர் இன்று என்னத்தையாவது உளறுவார். உடனே இந்தக் கமிஷன் கட்சிகள் இருக்கிறதே மன்னிக்கவும் இந்தக் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவர்கள் பங்குக்கு எதாவதுஒன்றினை உளற, கூட்டணி வேட்டணி என  வைக்கப்படும் படலம் துவங்கிட ஆரம்பித்துவிட்டது என்றே நான் கருதுகிறேன் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

என்னதான் நடக்கிறது என்பதனை நாம் சற்று பொறுத்திருந்துதான்  பார்ப்போமே.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு.

புதன், 3 பிப்ரவரி, 2016

மனித இனத்தில், சாதிகள் என்பதை நாம் அழித்திடவே முடியாத ஒன்றா ? -ஒரு சிந்தனைக் கட்டுரை!!








                                     சாதிகள் !!





அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் வணக்கம்.

இருதினங்களுக்கு முன்பாக ஆந்திர 
மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 
பெரும்பானமையாக வசிக்கும் கபூ 
இனத்தைச்சேர்ந்த மக்கள், தங்களை 
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்திட 
வேண்டும் என்று கோரி நடத்திய அந்த 
போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்ததன்
விளைவு, இரண்டு தொடர்வண்டிகள் 
முற்றிலும் எரிக்கப்பட்டு பதட்டமான 
சூழல் நிலவியதை நாம் பார்த்தோம்.
அப்போது என் மனதில் தோன்றிய 
சிந்தனையை, நான் இங்கே கட்டுரையின் 
வடிவில் நேயர்களாகிய உங்களுக்கு 
வழங்கி மகிழ்கிறேன்.

சாதிகள் இல்லையடி பாப்பா !!
குலம் தாழ்த்தி உயர்த்தி சொலல் பாவம் !!

என்று பாடிய பாரதியார் தனது மற்றொரு 
பாடலில் என்ன சொல்கிறார் என்றால் :- 

வெள்ளை நிறத்தொரு பூனை !!
   எமது வீட்டில் வளருது கண்டீர் !!
பிள்ளைகள் பெற்றதப் பூனை !!
  அவை பேருக்கோர் நிறமாம் !!
சாம்பல் நிறமொரு குட்டி !!-கருஞ் 
  சாந்து நிறமொரு குட்டி !!
பாம்பின் நிறமொரு குட்டி !!-வெள்ளை 
  பாலின் நிறமொரு குட்டி !!
எந்த நிறமிருந்தாலும் அவை !!
 யாவுமொரே தரமன்றோ ?
இந்த நிறம் சிறிதென்றும் !!
 இது எற்றமெனும் கொள்ளலாமோ ?

என்று பாடி மகிழ்ந்தான். 

ஒளவைக்கிழவியோ இன்னும் ஒருபடி 
மேலேபோய், என்ன சொன்னாள் என்று 
கேட்டால் :-

சாதி இரண்டொழிய வேறில்லை !!சாற்றுங்கால் 
மேதினியில் இட்டார் பெரியோர் !!
இடாதார் இழிகுலத்தோர் !! 
பட்டாங்கியில் உள்ளபடி !!

என்று சொல்லி நெஞ்சில் ஈவு,இரக்கம்,
பிறர் துன்பம்,துயர் கண்டு மனமிறங்கி ,
அங்கே அவர்களுக்கு தங்களால் முடிந்த 
உதவிகளை வழங்கிடுவோர் ஒரு உயர்ந்தசாதி 
என்றும் அது இல்லாத கல்நெஞ்சு உள்ள 
கனவான்கள் இழிந்த குலத்தைச் சேர்ந்த 
மனிதர்கள் எனவும் பாடிச்சென்றார்.

இவை எல்லாம் ஓர்புறம் இருக்க நமது 
சங்ககால இலக்கிய நூலில் என்ன ஒரு 
கருத்து பதிவேற்றம் செய்துள்ளது என 
பார்த்தோமேயானால் அங்கு சொல்லப்-
-பட்டுள்ள கருத்து இதுவே :-

நீரளவே ஆகுமாம் நீராம்பல் !!-தான் கற்ற 
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு !!-மேலைத் 
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் !!
குலத்தளவே ஆகுமாம் குணம் !!

பொருள் :-  
நீர் எவ்வளவு உயரம் இருப்ப்பினும் அந்த 
உயரம்தாண்டி வெளிவந்து பூ பூக்கும் குணம் 
கொண்டது நீரிலே பூத்திடும் ஆம்பல் வகைப்பூ.

எந்த அளவு நாம் கல்வி பயில்கிறோமோ
எத்தனை எத்தனை நூல்களை நாம் கற்று 
உணர்கிறோமோ, அந்த அளவிற்கே நமக்கு 
நுண்ணறிவு ( Intelligence ) என்பது இருக்கும்.

சென்ற பிறவியில் நாம் எந்த அளவிற்கு 
புண்ணியங்கள், நற்செயல்கள், புரிந்து 
இருந்தோமோ, அந்த அளவிற்கே இந்த 
பிறவியில் நாம் செல்வம் படைத்தவராக 
வாழ்ந்திட முடியும்.

நாம் எந்த குலத்தை ( ஜாதியை ) சேர்ந்தவராக 
இருக்கிறோமோ அந்த அளவிற்கு மட்டுமே 
நமக்கு குணம் என்பது இருந்திட முடியும். 


என்று சொல்லப்பட்டு உள்ளது. அதாவது 
இப்பாடல் மூலமாக என்ன கருத்து இங்கே 
வலியுறுத்திச் சொல்லப்படுகிறது என்று 
கேட்டால், ஜாதி என்ற ஓர் அமைப்பு, மனித 
குலம் தோன்றியநாள் முதல் அழிந்திடும்
நாள் வரைக்கும் இங்கே இருந்துதான் தீரும் 
அதை யாராலும், எந்த அரசாலும் அகற்றிடவே 
இயலாது என்று தான் நான் சிந்திக்கிறேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு.
  

               

வியாழன், 15 அக்டோபர், 2015

என்னுள் ஒளிர்ந்த சிந்தனைகள் !! உங்கள் அனைவரின் சிந்தனைக்கு !!






உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் 

என் அன்பிற்குரிய தமிழ் நெஞ்சங்களே !!



உங்கள் அனைவருக்கும் என் வணக்கம். 

இன்றைய தினம் நான் எனது நண்பர் 

திரு நாகப்பன் அவர்களுடன் இருந்த பொழுது 

பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு அரசு அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். 

நண்பர் நாகப்பனுடன்.அந்த அலுவலகத்தில் 

அவரது ஆருயிர் நண்பர் அலுவலராக 

இருப்பதாகவும் அவரை சந்திக்க 

வந்துள்ளதாகவும்  அவர் என்னிடம் கூறினார். 

அந்த அரசு அலுவலகத்தில் அங்கே 

கிளை மேலாளராக அவரது நண்பர்  

திரு மெய்யப்பன் அவர்கள் பணி செய்து வந்தார். 

அவரை அங்கே எனக்கு எனது நண்பர் 

திரு நாகப்பன் அறிமுகம் செய்து வைத்தார். 

ஏறத்தாள இருபது ஆண்டுகளுக்கு மேலாக 

இடைவெளி இருந்த நிலையில் நடந்தது என் 

நண்பர் நாகப்பன் மற்றும் அவரது நண்பர் திரு 

மெய்யப்பன் இவர்கள் இருவரது சந்திப்பு.


வழக்கம்போல இருவரும் உரையாடல் 

செய்திடத்துவங்கினர். இந்த இடத்தில் எனது 

நண்பர் நாகப்பன் அவர்கள் பற்றி நான் 

கண்டிப்பாக குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இளமைக்காலம் தொட்டே அவர் பெண்கள் 

விஷயத்தில் மிகவும் மென்மையான நெஞ்சம் 

படைத்தவர். அதற்குக் காரணம் என்னான்னு 

கேட்டீங்கன்னா எனது நண்பர் பார்க்க நல்ல 

சிவந்த நிற மேனியும், சுருட்டைத் தலை முடியும் 

அரும்பு மீசையும், குறும்புப் பார்வையும் 

கொண்ட அவரை எந்த பெண்ணிற்கும் பார்த்த 

உடனேயே பிடிக்கும். அந்த அளவிற்கு 

ஜாம்பவான் போன்ற திடகாத்திரமான தோற்றம் 

உடையவர் அவர். இதன்காரணமாக, அவரது 

இளமைவலையில்வீழ்ந்து தன்னையே 

பறிகொடுத்த பெண்கள் ஏராளம், ஏராளம்.

அவர்களிடம் இவர் பெற்ற இன்பங்களோ மிக 

மிகத் தாராளம் தாராளம்.  இது இப்படி இருக்க, 

அவரது இருபது வயது முதல் முப்பது 

வரையில் பத்து ஆண்டுகள் ஏகப்பட்ட 

காமலீலைகளை நடத்தி முடித்திட்ட எனது 

நண்பருக்கும் ஆச்சுங்க திருமணம் 

வீட்டுக்கு வந்த மகராசி அவ்வளவு அழகுன்னு 

சொல்லிட முடியாதுதான். 

இருந்தாலும் ஏதோ நல்லா சமைப்பாங்க.

வீட்டு வேலைகளை செய்வாங்க. எனது 

நண்பருக்கு இரண்டு பிள்ளைகளையும் பெத்துக் 

குடுத்தாங்க. ( ஆண் ஒன்று பெண் ஒன்று)  இப்படி 

இருக்கும்போது அவரது நண்பர் அரசு அலுவலக 

திரு மெய்யப்பன் இவரிடம் ஏண்டா உனக்கு எப்ப 

கல்யாணம் ஆச்சு ? எத்தனை குழந்தைகள் 

அப்படி இப்படீன்னு கேள்விகள் கேக்க 

ஆரம்பிச்சாங்க. இவரும் பதில்களைச் 

சொல்லிக்கொண்டு வரும்போதுதாங்க, 

என்னோட உள் மனதில் சில சிந்தனைகள் 

உதிக்க ஆரம்பிச்சது. அதை இப்ப நான் 

உங்ககிட்டே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

ஒரு ஆண்மகன், தனது இளமை உணர்ச்சிகள் 

பீறிட்டுக் கிளம்பும்போது ஒரு பெண்ணுடன் 

அவன் உடலுறவு கொள்கிறான். அப்போது 

அவள் கருத்தரிக்கிறாள் என்று வைத்துக் 

கொள்வோம். அப்படிக் கருத்தரித்துப் 

பிறக்கும் குழந்தை, இவனது குழந்தைதானே ? 

( அது எந்தப்பெண்ணிடமிருந்து பிறந்தாலும்) 

என்ன நான் சொல்றது ? 

அப்ப திரு மெய்யப்பன் நண்பர் நாகப்பனிடம் 

கேட்டிருந்த கேள்விக்கு இவர் சொன்ன பதில் 

தனக்கு இரண்டு பிள்ளைகள் என்று சொன்னதும் 

தப்புத் தானேங்க ? அட...என்ன...நான்...

சொல்றது ? 

அன்னைக்கு இருந்து நான் வந்துங்க ஒரு 

முடிவுக்கு வந்துட்டேங்க. 

அது என்னான்னு கேட்டுக்கிட்டீங்கன்னா 

இனிமே நாம யார்கிட்டே கேள்வி கேட்டாலும், 

உங்க சம்சாரத்துக்கு எத்தனை குழந்தைகள் ? 

(அந்தக்குழந்தைகள்யார்மூலம் உருவாகியிருந்

தாலும், இந்த ஆள் கணக்கு தானே ) அப்படீன்னு 

கேக்கிறதுன்னு முடிவு செஞ்சுட்டேங்க. 

நான் எடுத்த முடிவு சரிதானேங்க ? 

அட..கொஞ்சம் பதில் பேசுங்க. அட...ஏனுங்க  

நீங்க டென்சன் ஆயிட்டீங்க. 

உங்களோட சொந்தக் கணக்குக்கு 

நீங்க போயிடீன்களா.


சரிங்க நான் போயிட்டு அப்பாலே வாறன்.

நன்றி !!  வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா. பாலு.

வெள்ளி, 17 ஜூலை, 2015

சேதி தெரியுமா உங்களுக்கு ? ( CID சுப்பிரமணிய சாமி (TWITTER) டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்ட இரகசியமான செய்தி இது )







உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்ற

அன்பு உள்ளம் கொண்ட இஸ்லாமியப்

பெருமக்கள் அனைவருக்கும் எனது

மனம் கனிந்த புனித ரம்ஜான் பெருநாள்

வாழ்த்துக்களைப் பணிவன்புடன் நான்

தெரிவித்துக்கொள்கிறேன்.


பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!

அஸ்ஸலாமு அலேக்கும்!!


எல்லாப் புகழும் இறைவனுக்கே.!!

அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு !!

அந்த வல்லோன் புகழைப் பாடிடுவோம் !!

என்றும் ஒற்றுமையாகவே கூடிடுவோம் !!


உலகம் முழுவதும் உள்ள சாந்தி சமாதானம்

இவைகளை மட்டிலுமே அனைவர்க்கும் தந்து

ஆத்மதிருப்தி அடைந்திடும் இஸ்லாமியப்

பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய

மனம் கனிந்த " ரம்ஜான் " பெருநாள் 

வாழ்த்துக்கள்.



அன்பர்களே சுமார் மூன்று தினங்களுக்கு முன்பு

அரசியல் குற்றங்களை கண்டுபிடித்து 

அவர்களைநீதிமன்றக் கூண்டிற்குள் ஏற்றி தக்க 

தண்டனைவாங்கித்தருவதில் வல்லவரும், 

உண்மையிலேயே நல்லவருமான

மதிப்பிற்குரிய திரு சுப்பிரமணியன் சுவாமி 

அவர்கள்ஒரு கருத்தினை ஆங்கே அந்த 

டுவிட்டர் இணைய தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அதனை நேயர்களாகிய உங்கள் அனைவருக்கும்

பெற்றுத்தருவதில் நான் அளவு கடந்த 

மனமகிழ்ச்சி அடைகிறேன்.


விஷயம் என்னவோ இதுதான் :-


தமிழக அரசியல் வானில் மிகவும் சக்தி வாய்ந்த

ஒரு பதவியில் உள்ள ஒருவருக்கு உடல்நிலை

மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்

எப்போது அமெரிக்காவில் உள்ள மேரி லாண்ட்

மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற லிவர் மாற்று

அறுவை சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு

லிவர்மாற்றுஅறுவைசிகிட்சைக்குத்தன்னை

ஆட்படுத்திக்கொள்ளப் போகிறார் என்பதுதான்

மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.

அவருக்கு உள்ள இன்னபிற நோய்களின்

விபரம் இதோ :-


1)  உயர் இரத்த அழுத்தம்.

2)  அதிகமான சர்க்கரை நோய்.

3)  தைராய்டு நோய்.

4)  மிக அதிகமான உப்பு சத்து நோய்.

5)  சிறுநீரகக் கோளாறு.


இன்னும் இங்கு குறிப்பிட முடியாத பலவிதமான

நோய் தொற்றுகள். இவைகளுக்கு சிகிச்சை பெற

கூடிய விரைவில் அன்னார் அமெரிக்கா நாடு 

சென்றுஅங்கே தனது உடலை, உடலில் உள்ள 

நோய்களைநீக்கி சரி செய்வதற்கு புறப்படத் 

தயாராக உள்ளார்.


இவை அனைத்தும் சரி செய்யப்பட்டு நாடு 

திரும்புதல்என்பது மிக மிக அரிது 

என்பதால்தான் தான் அன்னார்

மீது உள்ள சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதி

மன்றம் சென்று மேல்முறையீடு 

செய்திடவில்லைஎன்றும் மிகத் தெளிவாக பதிவு 

செய்துள்ளார் தமதுகருத்தினை டுவிட்டர் 

இணையதளத்தில். 

எங்கேபார்ப்பபோம். தமிழக அரசு அன்னார் மீது 

அவதூறுவழக்கு பதிவு செய்கிறதா இல்லையா 

என்று. 

அதனால்முடியாது. ஏன் முடியாது ? ஏனென்றால் 

இவைஅனைத்திற்கும் திரு சுப்பி.சாமி அவர்கள் 

தக்கமருத்துவமனை பதிவேடுகள், 

ஆவணங்களை தனது கைவசம் தயார்

நிலையில் வைத்து உள்ளார் என்பதனால்.


வினை விதைச்சா வினைதானே அறுவடை 

செய்யணும்.

திணை விதைச்சா தினையை அறுவடை

செய்திடலாம். 

என்னே விதியில் கொடுமை இது.                               

எத்தனை தடைகளைத் தாண்டி குற்ற 

வழக்கிநின்று விடுதலை பெற்று உயர் பதவி 

பெற்று பின்னர் மீண்டும் இடைத்தேர்தலில் 

அபார, அமோக வெற்றி அடைந்து சட்ட ரீதியாக 

அந்தப் பதவியில் அமர்ந்து கோலோச்சும் 

வேலையிலா இந்தக் கொடிய நோய்கள் 

அன்னாரை சுற்றி வளம் வந்து தாக்கிட 

வேண்டும் ?


அன்னார் நலம் பெற்று நாடு திரும்பிட நாம் 

அனைவரும்இறைவனிடம் வேண்டிக் 

கொள்வதைத் தவிரநம்மால் வேறு என்ன 

செய்திட முடியும் ?.


வாழ்க !! திரு சுப்பிரமணிய சாமி அவர்களின் 

நாட்டுப்பற்று.

வளர்க !! அவரது துப்பறியும் அறிவும்,திறமையும்,

நல்ஆற்றலும்.


பாவம் தமிழக அரசு.

அனுதாபம், அந்தக்கட்சியின்  உயர்மட்டத் 

தலைவர்கள்முதல் கடைசிக் கட்ட 

தொண்டர்கள் வரையிலும்.

போனால் போகட்டும் போடா !! இந்தப்பூமியில் 

நிலையாய் வாழ்ந்தவர் யாரடா !!


நன்றி !! வணக்கம் !!



அன்புடன் திருமலை.இரா. பாலு.